For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கல் தொடர் விடுமுறை | விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை!

09:35 AM Jan 13, 2024 IST | Web Editor
பொங்கல் தொடர் விடுமுறை   விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை
Advertisement

பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக, விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. 

Advertisement

பொங்கலை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதற்காக சிறப்பு பேருந்துகள்,  சிறப்பு ரயில்களும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் அவசரமாக சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு பொங்கலுக்கு முன் விமானத்தில் செல்லும் பலர் உள்ளனர்.  சிலர் பொங்கல் அன்று அதிகாலை கூட செல்வார்கள்.  தொடர் விடுமுறை எதிரொலியாக விமான டிக்கெட் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது.  சென்னையில் இருந்து திருச்சி,  மதுரை,  தூத்துக்குடி,  கோவை,  சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

  • சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315 இன்று ரூ.14,689
  • சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290 இன்று ரூ.11,329
  • சென்னை-தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624 இன்று ரூ.13,639
  • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 இன்று ரூ.17,262
  • சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம்- ரூ.2,264 இன்று ரூ.11,369
Advertisement