Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

01:46 PM Jan 09, 2024 IST | Jeni
Advertisement

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மத்திய மாநில அரசு ஊழியர்கள்,  வருமான வரி செலுத்துவோர்,  பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்,  சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து,  ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்..! - அமைச்சர் சிவசங்கர் தகவல்

இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags :
#rs1000CMOTamilNaduMKStalinPongalPongal2024PongalGiftrationTNGovt
Advertisement
Next Article