பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா - ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி
கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா
கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியீடு!
அதனைத்தொடர்ந்து, பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டைகள் அணிந்தும் மாணவிகள் சேலை அணிந்து அனைவரும் ஒற்றுமையாக பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு சிறப்பாக கொண்டாடினர்.
இதையடுத்து, பொங்கல் விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பானை உடைப்பது, முளைப்பாரி ஏந்தி சென்று மாணவிகள் கும்மி அடிப்பது போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.