For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கல் பண்டிகை - தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:43 PM Jan 13, 2025 IST | Web Editor
பொங்கல் பண்டிகை   தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்போம்.

Advertisement

அந்த வகையில் நாளை கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

பொங்கல் திருநாள்!

உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்.

பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement