பொங்கல் பண்டிகை - தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கலையொட்டி தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
ரயில் எண் 06092
திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும். மதியம் 3.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில் எண் 06091
சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
ரயில் எண் 06093
சென்னை தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில், ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
ரயில் எண் 06094
கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 14 (செவ்வாய்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில், மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில் எண் 06089
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் (ஞாயிற்று கிழமைகளில்) சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.00 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
ரயில் எண் 06090
நாகர்கோவிலில் இருந்து டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) சிறப்பு ரயில் இயக்கப்படும். இரவு 7.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 09.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
ரயில் எண் 06104
ராமநாதபுரத்திலிருந்து சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில் எண் 06103
சென்னை தாம்பரத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) சிறப்பு ரயில் இயக்கப்படும். மாலை 5.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.