பொங்கல் பண்டிகை - சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14 தேதி வரை 19,484 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையிலிருந்து மட்டும் 11,006 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்
1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள்
2 கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்.
3. தாம்பரம் சானிடோரியம் அ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள்
ஆ) வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.
4. பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்
பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர். காஞ்சிபுரம். செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.
5. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி. செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி செந்துறை. செயங்கொண்டம். காரைக்குடி புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர். பொள்ளாச்சி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் பெங்களுர் மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும். மயிலாடுதுறை,நாகப்பட்டினம். திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி,
6. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட (KCBT), கிளாம்பாக்கம் தடங்கள்
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி
திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 5 பேருந்து நிலையங்களுக்கும் பொதுமக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் 450 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.