For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கல் விழா கொண்டாட்டம் - ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களால் பரபரப்பு!

07:46 AM Jan 13, 2024 IST | Web Editor
பொங்கல் விழா கொண்டாட்டம்   ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களால் பரபரப்பு
Advertisement

சென்னை கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேருந்து மேற்கூரையில் நடனம், தர்ணா போராட்டம் என மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Advertisement

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (ஜன.12) நடந்த  பொங்கல் விழாவில் தாமதமாக வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!

இதையடுத்து, அந்த மாணவர்கள் நுழைவாயில் முன்பு கோஷம் எழுப்பியதுடன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நின்று கூச்சலிட்டுள்ளனர். பின்னர், அந்த வழியாக வந்த மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், சில மாணவர்கள் பேருந்துகளின் கூரை மீது ஏறி நடனம் ஆடினர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சில மாணவர்கள் திரண்டு வந்து, மூடப்பட்ட பச்சையப்பன் கல்லூரி நுழைவாயில் கதவுக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர். அதனைத்தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல, மாநிலக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாடினர். இதில் முன்னாள் மாணவர்கள் இருவர் உட்பட 10 பேர் அடையாள அட்டையின்றி கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம், முகநூல் மூலம் முன்னாள் கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு, பலர் குவிந்த நிலையில், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

இதனால், மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னை சென்ட்ரலில் பேருந்தை மறித்ததோடு பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டனர்.

Tags :
Advertisement