For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai -யில் விநாயகர் சிலை கரைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

10:17 AM Aug 25, 2024 IST | Web Editor
 chennai  யில் விநாயகர் சிலை கரைப்பு   வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Advertisement

சென்னையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான விதிமுறைகளை மாசுக்கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் :

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை(கடல், ஆறு மற்றும் குளம்) பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுா்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான விதிமுறைகள்:

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள் : வலுக்கும் பாலியல் குற்றச்சாட்டு - மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் #ActorSiddique!

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய , நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்தவும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement