For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் - தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தல்!

வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
07:45 PM Mar 04, 2025 IST | Web Editor
வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்   தேர்தல் அதிகாரிகளுக்கு  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தல்
Advertisement

அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை என இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல் நாளான இன்று தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Advertisement

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..

"அனைத்து தலைமை தேர்தல் அதிகாரி(CEO), மாவட்ட தேர்தல் அதிகாரி(DEO), தேர்தல் நடத்தும் அதிகாரி(RO) உள்ளிட்ட அலுவலர்கள் தேர்தல் ஆணைய சட்டம் மற்றும் அறிவுறுத்தல்கள், தங்களின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்து முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 325 மற்றும் 326 இன் படி 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியமாக இருக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

அதே நேரத்தில் தேர்தல் பணியாளர்கள் அல்லது அலுவலர்கள் யாரும் தவறான உரிமைகோரல்களைப் பயன்படுத்தி மிரட்டப்படுவதை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 800 முதல் 1200 வாக்காளர்கள் இருக்குமாறும், வாக்காளர் வசிக்கும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி இருக்குமாறும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கிராமப்புறங்களில் எளிதாக வாக்களிக்கும் வகையில் முறையான உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய வாக்குச் சாவடிகள் மையங்களை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமின்றி குடிசைப் பகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்” என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement