Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும்" - தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

07:54 AM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட
இந்தோனேசிய பெண்ணுக்கு ரூ.2.50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, சோதனை நடத்திய காவல் ஆய்வாளருக்கு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவர் நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை பார்த்துவந்தததாகவும், அப்போது நீலாங்கரை காவல் ஆய்வாளராக இருந்த கே.நடராஜன் அந்த மசாஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்தி, பாலியல் தொழில் நடப்பதாக வழக்குப்பதிவு செய்தததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர் அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணாக குறிப்பிடப்பட்டு, அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டதாகவும், இதனால், தனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல் ஆய்வாளருக்கு  உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், "அந்த பெண்ணுக்கு ரூ.2.50 லட்சத்தை இழப்பீடாக 4 வாரத்துக்குள் அரசு வழங்கவேண்டும். அந்த தொகையை இன்ஸ்பெக்டரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் நடராஜன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்தோனேசியாவில் இருந்து அந்த பெண் முறையான பாஸ்போர்ட் பெற்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.  காவல் ஆய்வாளரின் கவனக்குறைவான செயலால், அவர் தேவையில்லாமல் 26 நாட்கள் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டார். அதனால், அவர் கடுமையான மனவேதனையை அனுபவித்து இருப்பார்.

அதுவும் வெளிநாட்டு பெண்ணை இவ்வாறு காப்பகத்தில் அடைக்கும்போது, அந்த நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கவேண்டும்.  அதை காவல் ஆய்வாளர் செய்யாததால், இழப்பீடு வழங்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் தலையிட முடியாது.

மேலும், காவல் ஆய்வாளர் செய்த தவறுக்காக இந்த இழப்பீட்டு தொகையை அரசு வழங்க முடியாது.  இந்த இழப்பீட்டு தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்க அனுமதித்தால், அது தவறான முன் உதாரணமாகி விடும்" என தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags :
Chennaichennai High CourtinspectorMadras High CourtPolice
Advertisement
Next Article