Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்கப் பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு போலி நகை விற்பனை! - இந்திய நகைக்கடை உரிமையாளர்கள் தலைமறைவு!

05:03 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்கப் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டு,  தலைமறைவாகியுள்ள இந்திய நகைக்கடை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

அமெரிக்காவில் வசிக்கும் செரிஷ், ரா ஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் உள்ள ஒரு கடையில் இருந்து ரூ.6 கோடிக்கு நகைகளை வாங்கியுள்ளார்.  பின்னர், அந்த நபர் கடந்த ஏப்ரல் மாதத்தில்,  அமெரிக்காவில் நடந்த ஒரு கண்காட்சியில் நகைகளை காட்சிப்படுத்தினார்.  அப்போது தங்க பாலிஷ் கொண்ட வெள்ளி நகைகள்  என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ்,  ஜெய்ப்பூருக்கு சென்ற அந்த கடை உரிமையாளர்களான ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் கௌரவ் ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.  அப்போது கடை உரிமையாளர்கள் இருவரும் அந்த நகைகள் அனைத்து போலியானது அல்ல என்று மறுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆப்பிளை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்! – நன்றி தெரிவித்த தமிழ் நடிகர்!

இதனைத் தொடர்ந்து,  செரிஷ் மே 18ம் தேதி கடை உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  மேலும், அமெரிக்க தூதரகத்தின் உதவியையும் அணுகியுள்ளார்.  மேலும், ஜெய்ப்பூர் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணையை மேற்கொண்டனர்.  காவல்துறையினரின் விசாரணையில் அது போலி நகைகள் என்பது தெரிய வந்தது.

ஆனால்,  குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.  நகைகளின் நம்பகத்தன்மை குறித்த போலிச் சான்றிதழை வழங்கிய நந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags :
American womancheatingIndiajewelry store ownerPolice
Advertisement
Next Article