Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய் மீது போலீசில் புகார்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி இஸ்லாமிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
12:40 PM Mar 11, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

Advertisement

"தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 7-ம் தேதி இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இப்தார் நிகழ்ச்சி என்பது மிகவும் கண்ணியமான நிகழ்ச்சியாகும். இது மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்றது அல்ல. விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், இப்தார் நிகழ்ச்சி நோன்புக்கு சம்பந்தமே இல்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த உண்மையாக நோன்பை கடைபிடித்தவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தாக்கப்பட்டனர். பவுன்சர்கள் மூலம் அடித்து, உதைத்து வெளியே தள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நடிகர் விஜய் 1½ மணி நேரத்திற்கு முன்பே வந்தது தவறாகும். நோன்பு திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக அவர் வந்திருக்க வேண்டும். அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி, விதிமுறைகளுக்கு மாறாக நடந்ததால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
news7 tamilNews7 Tamil UpdatsPoliceTamil Nadu Sunnath JamathTNSJtvkTVK Vijayvijay
Advertisement
Next Article