For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் லீ சன் யுன் இறப்பு குறித்து அவதூறு பரப்புவதா? பாராசைட் இயக்குநர் ஆவேசம்!

04:26 PM Jan 12, 2024 IST | Web Editor
நடிகர் லீ சன் யுன் இறப்பு குறித்து அவதூறு பரப்புவதா  பாராசைட் இயக்குநர் ஆவேசம்
Advertisement

மறைந்த நடிகர் லீ சன் யுன் இறப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் காவல்துறை மற்றும் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவது குறித்து இயக்குநர் போங் ஜூன் ஹோ உள்பட தென்கொரிய திரைப்பட அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement

'பாராசைட்' என்கிற தென் கொரிய திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை அள்ளிச் சென்று உலகளவில் கவனம் ஈர்த்தது.

இதையும் படியுங்கள் : சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் மர்மமான முறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காரில் இறந்து கிடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவருக்கு வயது 48. போதைப்பொருள் வழக்கில் சிக்கி விசாரணையில் இருந்த லீ சன் கியூன், (டிச.26) தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடலைப் பூங்கா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலிருந்து மீட்டதாகவும் தெரிவித்த காவல்துறையினர், அவருடைய தற்கொலைக் குறிப்புகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், அவரது இறப்புக்கு பிறகு காவல்துறை விசாரணையின் தகவல்களைக் கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மறைந்த நடிகர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதாகவும் இயக்குநர் உள்பட தென்கொரிய திரைப்பட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து இயக்குநர் போங் ஜூன் ஹோ கூறியதாவது, "விசாரணையின்போது காவல் துறையின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மேலும், அதிகாரபூர்வமற்ற தகவல் கசிவு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்" என போங் ஜூன் ஹோ குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement