பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!
10:34 AM Nov 14, 2023 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் மது பாட்டிலில் விஷப்பூச்சி இறந்து கிடந்துள்ளதால், அதனை அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.  இந்த டாஸ்மாக் கடையில் தீபாவளியை முன்னிட்டு,  நேற்று பிற்பகல் மூன்று இளைஞர்கள் மது வாங்கி அருந்தி உள்ளனர்.
இந்நிலையில், பாதி பாட்டில் காலியான பிறகு கவனித்தபோது மது பாட்டிலுக்குள், விஷ பூச்சி இறந்து கிடந்துள்ளது.  இதனை தொடர்ந்து மது அருந்திய ஒருவருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடன் மருந்து மது அருந்தியவர் டாஸ்மாக் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து எவ்வித பொறுப்பான பதிலும் கிடைக்கவில்லை.   இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து,  அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
சௌம்யா.மோ
                 Advertisement 
                
 
            
         Next Article