கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவரது தாயார் அங்கம்மாள்.
இதையும் படியுங்கள் : “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
என்னைப் பெற்ற அன்னை
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் தாயார் இன்று காலமானார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, "என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.