#Mannkibaat | "மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ" - பிரதமர் மோடி பாராட்டு!
மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ என 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் உரையாற்றுகிறார். அந்த வகையில், இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். இதில், மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுபஶ்ரீ உருவாக்கி உள்ள மூலிகைப் பூங்காவிற்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில், ஒரு மூலிகைப் பூங்காவையே ஆசிரியை சுபஶ்ரீ உருவாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி மனிதன் குரல் நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் பேசியதாவது:
"ஆசிரியை சுபஶ்ரீ தனது முயற்சியால், மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 1980ம் ஆண்டு இவருடைய தந்தையை பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு அவரை நலம்பெறச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் ஆசிரியை சுபஶ்ரீ.
இதையும் படியுங்கள் : CPIM இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்!
இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன.கொரோனா காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண ஏராளமான பொது மக்கள் வருகை தருகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார். இவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது.ஆசிரியை சுபஶ்ரீ நல்வாழ்த்துக்கள்"
இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.