Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்" - எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

09:04 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். 

Advertisement

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவr ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சென்று சந்தித்தார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஒரு ஆண்டிற்கும் மேலாக அங்கு பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுவரை மணிப்பூருக்கு மூன்று முறை ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு! தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்.  மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு வருகை தந்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என நாடு விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வர வேண்டியது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இங்கு வந்து மக்களின் குரலைக் கேட்டு அவர்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மணிப்பூரில் பிரச்னை ஏற்படவில்லையென்றாலும் பிரதமர் இங்கு வந்திருக்க வேண்டும். ஆனால், மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி மக்களின் வலிகளைக் கேட்க வேண்டும். மணிப்பூர் சூழலை மேம்படுத்த எந்த உதவியையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
#INDIAAllianceCongressethnic violenceManipurPMModiPMOIndiaRahul gandhivictim
Advertisement
Next Article