For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

71 ஆயிரம் பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார் #PMModi..!

06:52 AM Dec 23, 2024 IST | Web Editor
71 ஆயிரம் பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார்  pmmodi
Advertisement

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பிரதமா் மோடி இன்று பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.

Advertisement

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று (டிச.23) நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது. அதில், மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்குகிறார்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது,

"ரோஜ்கர் மேளாவின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு டிசம்பர் 23 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை காணொலி வாயிலாக வழங்கவிருக்கிறார். இந்நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார். ரோஜ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சுய அதிகாரமளிப்பதற்கும் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும்.

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் சேருவார்கள்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement