Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடக்கம் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

06:45 PM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டிற்காக, பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து வரும் உழவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளை ஒன்று திரட்டி இந்த மாநாட்டை பாமக நடத்துகிறது. விவசாயிகளுக்காக பாமக நடத்தும் இந்த மாநாடு பிற கட்சிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

https://twitter.com/news7tamil/status/1870450936029868299

இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

  1. தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்னைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்!
  2. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!
  3. பாசனத் திட்டங்களை செயல்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!
  4. வேளாண் நிதிநிலை அறிக்கையை பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும்!
  5. உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக, ஏக்கருக்கு ரூ.10000 வழங்கவேண்டும்!
  6. மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும்!
  7. நீர்நிலைகளை தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்!
  8. தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும்!
  9. உழவர்களின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்; வட்டி மானியம் வழங்க வேண்டும்!
  10. நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ,5,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!
  11. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் கொள்முதல் விலை வேண்டும்!
  12. வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்!
  13. வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கவேண்டும்!
  14. பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனிக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்!
  15. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!
  16. மேகதாது அணை கூடாது - காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்!
  17. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
  18. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
  19. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
  20. தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்!
  21. தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்!
  22. அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்!
  23. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் பாசனத் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்!
  24. தமிழ்நாடு மாநில வேளாண்மை கொள்கையை உருவாக்கி வெளியிட வேண்டும்!
  25. தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கூடாது!
  26. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் நீரை திறக்க வேண்டும்!
  27. வீராணம் ஏரியின் கொள்ளளவை 2 டிஎம்சியாக உயர்த்த வேண்டும்!
  28. மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்!
  29. காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
  30. நந்தன் கால்வாய்த் திட்டம் மற்றும் தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்பை செயல்படுத்த வேண்டும்!
  31. காவிரி, கொள்ளிடத்தில் மணல் குவாரிகளை மூடி, தடுப்பணைகளை அமைக்க வேண்டும்!
  32. பாலாற்றில் குறைந்தது 25 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்!
  33. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் - கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
  34. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்!
  35. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்!
  36. சென்னை அருகே அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!
  37. தொழில், வணிகத் திட்டங்களுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை தமிழ்நாடு அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்!
  38. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்!
  39. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்!
  40. விளைநிலங்களில் கருவேல மரங்களை அகற்ற அரசு மானியம் வழங்கவேண்டும்!
  41. நீரா பானத்தை வணிக அடிப்படையில் விற்பனை செய்ய திட்டம் வகுக்க வேண்டும்!
  42. நியாயவிலைக் கடைகளில் நாட்டு சர்க்கரை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்!
  43. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும்; தமிழக விவசாயிகளிடம் ரூ.60 என்ற விலையில் செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்!
  44. திருமண்டங்குடி கால்ஸ் சர்க்கரை ஆலை, போளூர் தரணி சர்க்கரை ஆலை ஆகியவை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!
  45. திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு இரங்கல்

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
Anbumani RamadossNews7TamilPMKPMK ConferenceRamadosstiruvannamalai
Advertisement
Next Article