Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமகவின் இரண்டாம் கட்ட "தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்" - ஆகஸ்ட் 7ம் தேதி தொடக்கம்!

இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஆகஸ்ட் 7 ம் தேதி வந்தவாசியில் தொப்பிங்கவுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.
09:25 AM Aug 01, 2025 IST | Web Editor
இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஆகஸ்ட் 7 ம் தேதி வந்தவாசியில் தொப்பிங்கவுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.
Advertisement

பாமக தலைமை நிலையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்கள் விரோத, சமூக நீதிக்கு எதிரான, கொடுங்கோல் திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25&ஆம் நாள் திருப்போரூர் நகரில் தொடங்கி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

தமிழ்நாட்டு மக்களுக்கு 1. சமூக நீதிக்கான உரிமை 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை 3. வேலைக்கான உரிமை 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை 5. வளர்ச்சிக்கான உரிமை 6. நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை 8.மது போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4 ஆம் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ளது.

அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18 ஆம் நாள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் கட்ட பயணத்தின் விவரங்கள் வருமாறு:

ஆகஸ்ட் 7 - வந்தவாசி, செய்யாறு
ஆகஸ்ட் 8 - பென்னாத்தூர், போளூர்
ஆகஸ்ட் 11 - திண்டிவனம், செஞ்சி
ஆகஸ்ட் 12 - மைலம், விழுப்புரம், விக்கிரவாண்டி
ஆகஸ்ட் 13 - இரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை
ஆகஸ்ட் 17 - பர்கூர், ஊத்தங்கரை
ஆகஸ்ட் 18 - கிருஷ்ணகிரி, ஓசூர்

மூன்றாம் கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ANBUMANIAugust 7thPeople's Rights RecoveryPMKSecond Phasetamil nadu
Advertisement
Next Article