Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாமக-வின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும்” - தேர்தல் ஆணையம்

பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
01:04 PM Dec 04, 2025 IST | Web Editor
பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
Advertisement

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியதை அடுத்து, பாமகவின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார். தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. அதில், ஆவணங்களின்படி அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

Advertisement

இதற்கிடையே, பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ராமதாஸ் தரப்புக்கும் அன்புமணி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்னை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.

இரு தரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags :
Anbumani RamadossDelhiDelhi HCElection commissionPMKRamadoss
Advertisement
Next Article