Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று மாலை நடைபெறுகிறது பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
07:37 AM May 11, 2025 IST | Web Editor
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
Advertisement

பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ இன்று (மே 11) நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : முடிவுக்கு வந்ததா தாக்குதல்? ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

மேலும், இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “இனமே எழு உரிமை பெறு” – சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அதாவது மாநாட்டு திடலின் ட்ரோன் காட்சிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவுடன் ‘இனமே எழு உரிமை பெறு’ என குறிப்பிட்டிருந்தார்.

Tags :
சித்திரை முழுநிலவு மாநாடுAnbumani RamadossMamallapuramnews7 tamilNews7 Tamil UpdatesPMKRamadoss
Advertisement
Next Article