விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் உள்ளிட்டஆயிரகணக்காண பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அண்புமனி ,
”வன்னியர் சமுதாயம் மிக மிக பின் தங்கிய சமுதாயமாக உள்ளது.
ஸ்டாலினுக்கு வன்னியர் வாக்கு மட்டும் வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். ஆனால், சரியான முறையில் நீதிமன்றத்தில் வழக்காடாததால் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அந்த இடஒதுகீடு கிடைத்திருந்திருந்தால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மூன்றாயிரம் மாணவர்கள் மருத்துவத்தில் சேர்ந்திருப்பார்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர் “ஸ்டாலின் அரசே வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வாருங்கள், தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு இடஒதுக்கீடு வழங்க சாதி வாரி கணக்கெடுப்பு செய்ய உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இடஒதுக்கீடு வழங்க துளி கூட ஸ்டாலினுக்கு விருப்பமில்லை” என குற்றஞ்சாட்டினார்
மேலும் அவர், “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் செய்வோம், அதன் பிறகும் கொடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இடஒதுக்கீடு கொடுக்கும் வரை மறியல் போராட்டம் செய்வோம்” என எச்சரித்தார்.