அறுபதாவது திருமணநாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறுபதாவது திருமணநாளை கொண்டாடியுள்ளார்.
09:39 PM Jun 24, 2025 IST | Web Editor
Advertisement
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் இன்று தங்களது 60வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ப. சுவாமி நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று(ஜூன்.24) பாமக நிறுவனர் ராமதாஸ் - துணைவியார் சரஸ்வதி ஆகியோரின் திருமணநாள் விழா தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றதாக கூறியுள்ளார்.
Advertisement

இன்று மாலை நடந்த இந்த திருமணநாள் விழாவில் ராமதாஸின் குடும்பத்தினர்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் உட்பட உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களுக்கு ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோர் ஆசி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.