Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாளை பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம்" - ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
02:03 PM May 15, 2025 IST | Web Editor
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ கடந்த மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, பாமக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இவ்விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

Advertisement

இதையும் படியுங்கள் : தூங்கிக்கொண்டிருந்த நாயை தாக்கிய சிறுத்தை.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்!

அப்போது, மாநாட்டில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மே 16)  காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags :
news7 tamilNews7 Tamil UpdatesPattali makkal KatchiPMKRamadoss
Advertisement
Next Article