பாமக சித்திரை முழு நிலவு மாநாடு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவல்துறை!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடவுக்கவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை வெளியானது.
தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, மாநாடு நடைபெறும் மே 11 அன்று ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து 10 அறிவுரைகளை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.