#Nandhan | "சமூகநீதியின் கருப்பு வரலாற்றை நந்தன் பேசுகிறது" - அன்புமணி ராமதாஸ் பாராட்டு!
சமூகநீதியின் கருப்பு வரலாற்றை நந்தன் பேசுகிறது என ‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி திரைப்படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் ‘அயோத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறினார்.
இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த செப்.20ம் தேதி வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் அதனை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார் #OmarAbdullah
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"பத்திரிகையாளர் ரா.சரவணன் இயக்கி நடிகர் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.