Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை - ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்க உள்ளார்!

08:37 AM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வர உள்ளார்.

Advertisement

விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா, ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) திருச்சி வர உள்ளார். இந்த விழாவில் ஆளுநர் ஆர் என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார்.முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். அங்கு 33 மாணவ- மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள் : 2023-ல் விஜய் மக்கள் இயக்கம் செய்த பணிகள் என்னென்ன..?

இதையடுத்து, அங்கு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், ரூ.1.112 கோடி மதிப்பிலான விமானநிலைய புதிய முனையம், திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 'அமெதிஸ்ட் விடுதி, சேலம் மேக்னசைட் சந்திப்பு மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை - தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள், மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இவைதவிர, 5 சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். காமராசர் துறை முகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் இரண்டை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார். இவ்வாறு, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்ற உள்ளார்.

அதன்பின் மதியம் 1 மணி அளவில் தனி விமானத்தின் முலம் லட்சத்தீவு பகுதிகளுக்கு செல்ல உள்ளார். அங்கு ரூ. 1,150 கோடி அளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Tags :
Airport New TerminallaunchPM ModiPMOIndiaTamilNaduTrichy
Advertisement
Next Article