" #PMNarendraModiன் பிறந்தநாளையொட்டி சைவ விருந்து ஏற்பாடு" - அஜ்மீர் தர்கா நிர்வாகம் அறிவிப்பு!
பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி அஜ்மீர் தர்காவில் சைவ சமபந்தி
விருந்து வழங்கப்படவுள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அஜ்மீர் தர்கா நிர்வாகிகள் தெரிவித்ததாவது..
"பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்காகவும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்யப்படவுள்ளது.பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகள் நடத்தப்படும். பிரதமரின் பிறந்தநாளையொட்டி, 4,000 கிலோ சைவ உணவுகளை நாங்கள் தயார் செய்வோம். இந்திய சிறுபான்மை மற்றும் சிஷ்டி அறக்கட்டளை ஆகியவை லாங்கர் உணவை ஏற்பாடு செய்யும், மேலும் அனைத்து விருந்தினர்கள் மற்றும் பக்தர்களுக்கு காலையில் சமபந்தி உணவு விநியோகிக்கப்படும். இரவு 10:30 மணிக்கு தீப ஒளி காட்டப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களால் 'கவ்வாலி’ எனப்படும் பக்தி இன்னிசை பாடல்களும் பாடப்படவுள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : UnionMinister நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் நடந்தது என்ன? வானதி சீனிவாசன் விளக்கம்!
மேலும் இது தொடர்பாக தர்காவில் உள்ள சையத் அஃப்ஷான் சிஷ்டி கூறுகையில்..
“லாங்கரில் அரிசி, சுத்தமான நெய், உலர்ப் பழங்கள் போன்றவைகளுடன் ஹஜ்ரத் குவாஜா மொய்னுதின் சிஷ்டி தர்காவின் 550 ஆண்டுகால பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் புகழ்பெற்ற 'பெரிய ஷாஹி டெக்கில்'( உணவு தயாரிக்கும் உலகில் மிகப்பெரிய பாத்திரம்) லங்கார் தயாரிக்கப்படும். இது ஏராளமான ஆதரவற்றவர்களுக்கு நன்கொடையாகவும் வழங்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.