ரஷ்ய அதிபர் புதினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே நட்பு நாடுகளாக உள்ளன. பல இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவியுள்ளது. மேலும் இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக டிசம்பர் முதல் வாரத்தில் அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி, அதிபர் புதினின் 73 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் புதினின் இந்திய வருகையை எதிர்நோக்கி ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.