"அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி" - ராகுல் காந்தி விமர்சனம் !
பிரதமர் மோடியிடம், தொழிலபதிபர் கவுதம் அதானி மீதான வழக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ‘தனிப்பட்ட நபர் குறித்து அதிபர் டிரம்பிடம் விவாதிக்கவில்லை’ என்று பதிலளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " இந்தியாவில் கேள்விகள் கேட்டால், மவுனமாக இருப்பார். அதே வெளிநாட்டில் கேட்டால், அது தனிப்பட்ட விஷயம் என்பார். அமெரிக்காவிலும் கூட, அதானியின் ஊழலை மோடி மறைத்துள்ளார்.
நண்பரின் (கவுதம் அதானி) பாக்கெட்டை நிரப்புவது தான் மோடிக்கு நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால், லஞ்சம் வாங்கிக் கொண்டு நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது தனிப்பட்ட விஷயமாக மாறிவிடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.