”டிரம்பை பார்த்து பயப்படுகிறார் பிரதமர் மோடி ” - ராகுல்காந்தி விமர்சனம்..!
கடந்த 2022 முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தினார். மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை சுட்டிகாட்டி இந்தியா பொருட்களுக்கான வரியை உயர்த்தினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இதனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார்.
1.ரஷ்யாவின் எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதிக்கிறார்.
2. பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்புகிறார்
3. நிதியமைச்சரின் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்
4. ஷர்ம் எல்-ஷேக் பயணத்தை தவிர்த்தார்
5. ஆபரேஷன் சிந்தூர் குறித்து டிரம்பின் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை”
என்று தெரிவித்துள்ளார்.