Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
12:02 PM Aug 11, 2025 IST | Web Editor
டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக டெல்லி பாபா கரக் சிங் மார்க்கில்  கட்டப்பட்ட 184 குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்றுத திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, வீட்டுவசதி மற்றும்  நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிற பிரமுகர்கள் கலந்துகொண்டனர். புதிய அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியது,

Advertisement

”சில நாட்களுக்கு முன் மத்திய செயலகத்தை திறந்து வைத்தேன். இன்று, நாடாளுமன்றத்தில் இந்த குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுக்கும் இந்தியாவின் நான்கு பெரிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி என இந்த புதிய குடியிருப்பின் நான்கு கட்டடங்களுக்கு அழகாக பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இப்போது, அவர்களின் உத்வேகத்தால், நமது பொது பிரதிநிதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய வெள்ளம் பாயும். பெயர் சூட்டியதில் சிலருக்கும் பிரச்சினைகள் இருக்கும், ஏனெனில் கோசி நதியின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அவர்கள் கோசி நதியைப் பார்க்க மாட்டார்கள் மாறாக பீகார் தேர்தலை தொடர்புபடுத்தி பார்ப்பார்கள்.ஆறுகளுக்கு பெயரிடும் பாரம்பரியம் நாட்டின் ஒற்றுமையின் நூலில் நம்மை பிணைக்கிறது.நாடு ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டி உள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளையும் கட்டி வருகிறது. ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு சமூகமும் இவற்றின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நிலைத்தன்மையும், தூய்மையும் இந்தக் கட்டிடத்தின் அடையாளமாக மாற வேண்டும், இதுவே நம் அனைவரின் உறுதிப்பாடாகவும் இருக்க வேண்டும்”

என்று தெரிவித்தார்.

Tags :
IndiaNewslatestNewspminauguratesPMModi
Advertisement
Next Article