"தமிழ்நாடு மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!
தமிழ்நாடு மக்களிடமிருந்து கல்வி, நிதி, மொழி என அனைத்து உரிமைகளும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” - வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருந்துறையில் தீவிர
பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
"கடந்த 20 நாட்களில் 36 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளேன். 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திருப்பூர் தொகுதி எத்தனையாவது இடம் என்று தெரியவில்லை. பெருந்துறையில் கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் ஓரே நேரத்தில் 600 படுக்கைகள் உருவாக்கப்பட்டன. நொய்யல் வடக்கு ஆற்றின் கரையில் உள்ள கொடுமணல் அகழ்வாய்வு கண்டு எடுக்கப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்துறையில் ரூ. 40கோடி மதிப்பில் பொதுசுத்தகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இப்போது ஆயிரம் ரூபாயாக
உயர்ந்துள்ளது. திமுக தலைவர் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் ஆகிய விலை குறைக்க வாக்குறுதி கொடுத்துள்ளார். பெருந்துறையில் மக்காச் சோளம், சோயா போன்ற ஏராளமான விவசாய பொருட்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது. இதனால், தானியங்கள் இடுபொருள் சான்றிதழ் குறைக்க படும். புற்றுநோய் மையம் அமைக்கப்படும் ஆகிய வாக்குறுதி தரப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 56,000 மாணவர்கள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று
வருகிறார்கள். கலைஞர் பிறந்த நாளில் சிறந்த பரிசாக 40/40க்கு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கூட பிரதமர் நரேந்திர மோடி மரியாதை தரவில்லை. கல்வி, நிதி, மொழி அனைத்து உரிமைகளும் பறித்து உள்ளார்"
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.