Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் - சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

07:24 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி மத பிரதிஷ்டை செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் வெறுப்புக்கு உள்ளாகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி மத பிரதிஷ்டை செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் வெறுப்புக்கு உள்ளாகிறார் பிரதமர் மோடி. கோயில் கும்பாபிஷேகத்தை இந்து மக்கள் யாரும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரதமர் அந்தக் கோயில் பணியை செய்வது முற்றிலும் அரசியலே.

தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோத செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். கோயில்களின் அபிஷேகத்தை செய்வதற்காகவா மத்திய அரசு இருக்கிறது? அயோத்தி ராமர் கோயில் விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்த போது, இது அரசியல் நிகழ்வாக உள்ளது. எனவே அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இதனை எப்பொழுதும் ஏற்காது என தெரிவித்தோம்.

பிரதமர் மூன்று நாள் பயணமாக ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். ஆனால் புயல் மழையின் போது தமிழ்நாட்டை அவர் கண்டுகொள்ளவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தி வருகிறார். பத்திரிக்கையாளர்களையும், செய்தியாளர்களையும் அவமானப்படுத்தும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதற்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து செல்கிறீர்கள்.

அராஜகத்தின் வெளிப்பாடுதான் பாஜகவும் அண்ணாமலையும். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எதற்கு? திமுகவின் சேலம் இளைஞர் மாநாட்டை வரவேற்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
ayothiBala KrishnanBJPcpmNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO Indiaram temple
Advertisement
Next Article