Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:21 AM Apr 30, 2025 IST | Web Editor
Advertisement

கனடா நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் மார்க் ஜே கார்னிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான மக்களுக்கு இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
CanadacongratulatesMark CarneymodiPMprime minister
Advertisement
Next Article