Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூன் 20-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?

01:52 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

வருகிற 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இந்நிலையில்,  அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் , நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழா கடந்த 9ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.  பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,  நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால்,  மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத்,  பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே,  மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்,  செஷல்ஸ் துணை அதிபர் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அரசியல் பிரமுகர்கள்,  திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8000 பேர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.  பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.

இந்த நிலையில், வருகிற 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயங்க உள்ள வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.  இது தவிர ரயில்வேயில் பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளன.  இதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
ChennaiNarendra modiPMO Inida
Advertisement
Next Article