For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

04:45 PM May 03, 2024 IST | Jeni
பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி வெளியாகும்   பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Advertisement
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும்,  பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலும்,  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 8 ஆம்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது.  பிளஸ் 2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் பேரும்,  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் எழுதினர்.

இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.  தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.   இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement