இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்! வெளியான #ShockingReport!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சர்க்கரை மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உப்பும், சர்க்கரையும் உணவுக்கு அத்தியாவசியமானது. அத்தகைய பிரதான உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவன சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன.