Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"செப் - 17ல் விசிக சார்பில் "மது ஒழிப்பு மாநாடு" - திருமாவளவன் பேட்டி!

04:58 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

செப் - 17ம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டம் என விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்து கொள்கின்றனர். ஆனால் நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். பூமாலை கிடைக்கும் என நினைக்க வேண்டாம், கைவிலங்கிட தயாராக வேண்டும். எனது 27 வயதில் பிரகடனம் செய்தது ”மக்களை அரசியல் படுத்துவோம்” எனும் கொள்கைதான்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால் மக்கள் மதுபானக்கடையை மூட சொல்கிறார்கள். மது ஒழிப்பு மாநாடு விசிக சார்பில் நடத்தப்பட உள்ளது.மேலவளவு  படுக்கொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு பொறுப்புகள் இருந்தன. அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும் என நினைத்தவன் திருமா. அவ்வாறு செய்து இருந்தால் இந்த இயக்கம் வளர்ந்திருக்காது. விசிக நாடாளுமன்றம் வரை சென்று இருக்காது.

ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டால் 174 CRPC வழக்கு பதிவு செய்தது காவல்துறை . இதில் ஆணவம், அலட்சியம் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களை சாதி வெறியர்கள் எனச் சொல்லி காவல்துறை கூட தாக்குதல் நடத்தும் . ஆனால் சாதாரண வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடுவார்கள். சாதி சார்புதான் காவல்துறைக்குள்  இருக்கிறது.  அது எந்த ஆட்சியில் இருந்தாலும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வழக்கு பதிந்தால் அதை ஆய்வாளர் இல்லாமல் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். 10 சதவீத அதிகாரிகள் தான் நேர்மையாக இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள் :4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி .. 111-வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றினார்!

நேற்று ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு போடுகின்றது காவல்துறை. யாராக இருந்தாலும் காவல்துறையினருக்கு என ஒரு தன்மை இருக்கின்றது. விசிக அங்கீகாரம் பெற்ற இயக்கம், 4 எம்.எல்.ஏ, 2 எம்.பி என தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. பாஜகவுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் யுக்தம் தற்போது நடத்து கொண்டிருக்கிறது. இதை பிரகடனம் செய்தது விசிக. நாடாளுமன்றத்துக்கு வந்ததும் முதலில் அரசமைப்பு சட்டத்தை தொட்டு தலைவங்கிணார் பிரதமர் மோடி.

கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Next Article