For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் இன்று #Powercut ஏற்படும் இடங்கள்!

07:24 AM Aug 23, 2024 IST | Web Editor
சென்னையில் இன்று   powercut ஏற்படும் இடங்கள்
Advertisement

சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், உஸ்மான் சாலை, அத்திபட் உள்பட 6 இடங்களில் இன்று 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என  தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உஸ்மான் சாலை, அத்திப்பட், பெசன்ட் நகர், சிறுசேரி, நங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உஸ்மான் சாலை : பசூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவர்லால் நேரு தெரு, ராமச்சந்தரா ஐயர் தெரு, ராஜாபிள்ளைத்தோட்டம், மாம்பலம் ஹைரோடு, கோடம்பாக்கம் ஹைரோடு, வடக்கு உஸ்மான் சாலை, ரெங்கராஜபுரம் பகுதி, அஜீஸ் நகர், அக்போராபத், பராங்குசாபுரம், சி.ஆர்.பி. கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை மற்றும் ஸ்டேஷன் வியூ சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட் : அத்திப்பட் ஐ.சி.எப். காலனி, ஸ்லம் போர்டு, செல்லியம்மன் கோவில் நகர், செல்லியம்மன் நகர், அக்னி எஸ்டேட், எம்.ஜி.ஆர். புரம், ஆவின் மெயின் ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் ஆவின் பார்லர் வரை, வடக்குப் பகுதி சிட்கோ தொழிற்பேட்டை வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் 7-வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரை சாலையின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுசேரி : சிறுசேரி ஊராட்சி, எல் மற்றும் டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நங்கநல்லூர் : நேரு காலனி ஒரு பகுதி, 5-வது மெயின் ரோடு ஒரு பகுதி, 39 முதல் 42-வது தெரு, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோவில் தெரு, 4-வது மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் தாமஸ் மவுண்ட் : மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, வி.ஓ.சி. தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, மீனம்பாக்கம் முழு பகுதி, பாண்டியன் தெரு, விருதுநகர் ஹோட்டல், ஹோண்டா ஷோ ரூம், பி.எம்.டபிள்யு. ஷோ ரூம், குயின் சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement