பாம்பு பீட்சாவை அறிமுகப்படுத்திய Pizza Hut; ஆர்வத்துடன் வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்கள்!
பீட்சா தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Pizza Hut நிறுவனம் பாம்பு டாப்பிங்கை கொண்டு வந்துள்ளது.
உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உணவிற்காக பாம்பு வளர்ப்பு நடந்து வருகிறது. மக்களும் இரவு உணவில் மிகுந்த ஆர்வத்துடன் பாம்பு இறைச்சி சாப்பிடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் பீட்சாவில் பாம்பு இறைச்சியையும் சேர்த்துள்ளது அமெரிக்க நிறுவனம்.
நீங்கள் பல்வேறு வகையான பீட்சாக்களை சாப்பிட்டிருக்கலாம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி அதில் டாப்பிங்ஸ் சேர்க்கிறார்கள். சிலர் காய்கறிகள் நிறைந்த பீட்சாவை சாப்பிட விரும்புகிறார்கள், மற்றவர்கள் சிக்கன் அல்லது சீஸ் பீட்சாவை விரும்புகிறார்கள்.
ஆனால், இதுவரை யாரும் உங்களுக்கு பாம்புடன் கூடிய பீட்சாவை வழங்யிருக்க மாட்டார்கள். அந்த வகையில் பீட்சா தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Pizza Hut நிறுவனம் இந்த புதிய டாப்பிங்கை கொண்டுவந்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள பீட்சா ஹட், ஸ்னேக் பீட்சாவை விற்பனை செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனம். இது உலகம் முழுவதும் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இது சமீபத்தில் ஹாங்காங்கில் ஸ்னேக் பீட்சாவை அறிமுகப்படுத்தியது. சமூக ஊடகங்களில் அதன் விளம்பரங்களை பார்த்த பிறகு, மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இருப்பினும், குறிவைக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களும், ஆர்வத்துடன் பாம்பு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். குளிர்காலத்தில் பாம்பு சூப்பை குடிக்கிறார்கள். தென் சீனாவைத் தொடர்ந்து, தெற்காசியாவின் இந்த ஸ்பெஷல் பீட்சா விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பீட்சா ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்புப் பதிப்பு என்று Pizza Hut கூறுகிறது. இது கடுமையான குளிரில் மக்களை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பாம்பு இறைச்சியின் சுவையை சீஸ் உடன் சுவைக்க அனுமதிப்பதாகவும் Pizza Hut கூறுகிறது.