மார்ச்-ல் வெளியாகிறது ‘பிசாசு 2’!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட தாமதத்திற்கு பின் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் மார்ச் மாதம் படம் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவு பெற்று, போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதுவும் மார்ச்-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் இந்த இரண்டு படங்களில் எது முதலில் வெளியாகும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.