Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் நடித்த டமாயோ பெர்ரி உயிரிழப்பு!

10:08 AM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

'பிரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் நடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டமாயோ பெர்ரி.  கடல் சாகசப் பிரியரான இவர்,  கடலில் அலையின் வேகத்துக்கு ஏற்ப அலையில் சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்றவர்.  இவர் பல்வேறு கடல் சாகசங்களை மேற்கொள்வதில் அதீத ஆர்வமுடையவர்.

இந்நிலையில்,  ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில் கடந்த ஜூன் 23ம் தேதி பகலில் அலை சறுக்கல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது,  எதிர்பாராத விதமாக அவரை சுறா மீன் கடித்ததாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து கடலில் உயிருக்கு போராடியபடி ஒரு நபர் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட சிலர்,  ஹோனலூலு காவல்துறைக்கும் கடல் பாதுகாப்புப் படைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியேறினார்!

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய டமாயோ பெர்ரியை கரைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.  ஆனால்,  அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஹோனலூலு காவல்துறை மற்றும் கடல் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஜூன் 24ம் தேதி தெரிவித்துள்ளனர்.

'ப்ளூ கிரஷ்',  'ஹவாய்-ஓ' ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த டமாயோ பெர்ரிக்கு (49). டமாயோ பெர்ரியின் உயிரிழப்பு  திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
actorBrides of the CaribbeanDamayo PerrydeathPirates of the Caribbean
Advertisement
Next Article