பெண்களுக்கான பிரத்யேக 'பிங்க்' நிற வாக்குச்சாவடிகள் - சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!
நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்க சென்னையில் மொத்தம் 16 பிங்க் நிறத்திலான பிரத்தியேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்நிலையில், நாளை காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகள் என வாக்குச்சாவடிகள் உள்ளன.
சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குச்சாவடியில் அனைத்து வாக்காளரும் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் எழும்பூரில் இருக்கக்கூடிய அந்த வாக்குச்சாவடியில் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.