Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு!

05:34 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

சூரியனின் இயக்கத்தைக் காட்டும் விதவிதமான புதிய புகைப்படங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

Advertisement

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி ஏவப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த விண்கலம் பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ தொலைவுக்கு 125 நாட்கள் பயணித்தது.

பின்னர், எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆதித்யா எல்-1 எல்-1 புள்ளியை அடைந்தது. அதிலிருந்து சூரியனைப் பற்றி ஆய்வை ஆதித்யா எல்-1 மேற்கொண்டு வருகிறது. ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பும் தகவல்களை இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல்-1 படம் பிடித்தது. அதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 10) சூரியனின் இயக்கநிலையை காட்டும் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மே மாதம் சூரியனின் இயங்குநிலை எப்படி மாற்றம் அடைந்தது என்பதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படங்களை வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன.

இந்தப் புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளைக் காட்டுவதாகவும் கூறியுள்ளது. “ஆதித்யா எல்-1 இல் உள்ள SUIT மற்றும் VELC கருவிகள் மே 2024 இல் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளைப் படம்பிடித்துள்ளன" என்று இஸ்ரோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்பு புவி காந்த புயல்களுக்கு வழிவகுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags :
Aditya L1ISRONews7Tamilnews7TamilUpdatesSolar Storm
Advertisement
Next Article