Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிலிப்பைன்ஸ் : கால்மேகி புயலால் 85 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் புயல் தாக்கியதில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
07:01 AM Nov 06, 2025 IST | Web Editor
பிலிப்பைன்ஸில் புயல் தாக்கியதில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. கனமழையால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்துள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Heavy rainKalmagiPhilippinesPhilippines stromTyphoon
Advertisement
Next Article