Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்!

08:41 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

ரவுடி கருக்கா வினோத் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட நபரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.  அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  “டிமான்டி காலனி 2” டிரைலர் வெளியீட்டுத் தேதி! 

இதையடுத்து, கருக்கா வினோத்தை போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.  இது தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதி முன் கருக்கா வினோத் ஆஜர் படுத்தப்பட்டார்.  பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags :
AttackChennaifirGovernorKarukka Vinothnews7 tamilNews7 Tamil UpdatesPetrol BombRN RaviTN Police
Advertisement
Next Article