சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!
09:56 AM Aug 02, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             மேலும் வீட்டின் வராண்டாவில் இருந்த சோபா செட், வெளியில் இருந்த மரக்கதவு நிலப்படி ஆகியவையும் சேதமடைந்தன. இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், எஸ்.எஸ்.ஐ கணேசனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                 Advertisement 
                
 
            
        மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில்
காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக கணேசன் (58) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.  இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கணேசன் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.
 Next Article