ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டுவீச்சு: சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான எடுத்துகாட்டு - இ.பி.எஸ் கண்டனம்...
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 25) பிற்பகல் நேரத்தில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசியதாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி கருக்கா வினோத் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பையும், மாண்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான எடுத்துகாட்டாக உள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.